Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, December 18, 2018

பிளாஸ்டிக் தடை: தமிழக அரசாணைக்கு தடை இல்லை!

தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து தமிழக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த தடை நடைமுறைக்கு வருகிறது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மக்கக்கூடிய, மறுசுழற்சி செய்யக்கூடிய பாலி ப்ரொபிலின் பைகளுக்கும் சேர்த்து தமிழக அரசு தடை விதித்துள்ளதாகவும், அவ்வகை பைகள் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் அந்த மனுவில், பிளாஸ்டிக் மேலாண்மை சட்ட விதிகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்வதற்கோ அல்லது ஒழுங்குபடுத்துவதற்கோ மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், மத்திய அரசின் அதிகாரங்களில் தமிழக அரசு தலையிடுவதாகவும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தெளிவாக இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தற்போதைய நிலையில் பிளாஸ்டிக் தடை தொடர்பான தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க முடியாது எனவும், தமிழக அரசின் விளக்கத்தையும், மத்திய அரசின் விளக்கத்தையும் கேட்டபிறகுதான் தடை விதிக்க முடியும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Thursday, November 22, 2018

அறிவோம் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடமியாலஜி

‘சென்ட்ரல் ஜால்மா இன்ஸ்டிடியூட் ஆப் லெப்ரசி’ மற்றும் ‘இன்ஸ்டிடியூட் பார் ரிசர்ச் இன் மெடிக்கல் ஸ்டேடிஸ்டிக்ஸ்’ ஆகிய இரு மத்திய நிறுவனங்களையும் இணைத்து 1999ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை அம்பத்தூர் அருகே நிறுவப்பட்டதே ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடமியாலஜி’. நோய் தொற்று தடுப்பு மற்றும் உயிரி புள்ளி விவரங்களைக் கணக்கிடுவது ஆகிய நோக்கங்களை முக்கியமாகக் கொண்டே இந்த அமைப்பு முதலில் உருவாக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.எச்.ஓ.,) தொழுநோய் ஆராய்ச்சிக்கான இணை மையமாகச் செயல்பட்டு வருவதோடு, இந்தியாவில் எச்.ஐ.வி., நோய் தாக்கத்திற்கான தொழில்நுட்ப வள குழுவாகவும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சர்வதேச நோய் தொற்று ஆய்வுகள், நோய் மாதிரி ஆக்கல் எனப்படும் ‘டிசிஸ் மாடலிங்’, நோய் கட்டுப்பாட்டு திட்டங்களை மதிப்பிடுவது, புள்ளிவிவரங்களைக் கணக்கிடுவது, தொற்று நோயியல் ஆய்வு மற்றும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகளைச் சோதனை செய்வது ஆகிய ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.
குறிக்கோள்
இத்துறையில், அறிவியல் மாநாட்டுக் கூட்டங்களை நடத்தி மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வைக் கொண்டுவருதல் மற்றும் எபிடமியாலஜி துறைக்கான நிறுவன வசதிகளை மேம்படுத்தி இந்த துறையில் பல ஆராய்ச்சியாளர்களையும், பேராசிரியர்களையும் உருவாக்குதல் ஆகியவை இந்நிறுவனத்தின் முக்கிய குறிக்கொள்கள்.
மேலும், இத்துறை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, பொது மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களை போக்குவது மற்றும் ஆயுஷ் கூட்டுத் திட்டங்களை உருவாக்குவது போன்ற முக்கிய செயல்பாடுகளை குறிக்கோளாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
படிப்புகள்
இந்த நிறுவனம் திருவனந்தபுரத்தில் உள்ள ‘ஸ்ரீ சித்ர திருநாள் இன்ஸ்டிடியூட் பார் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி’கல்வி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, களப்பயிற்சி அடங்கிய, ‘மாஸ்டர் ஆப் அப்லைட் எபிடமியாலஜி’ (எம்.ஏ.இ.,) படிப்பினை வழங்குகிறது.
என்.ஐ.இ., நிறுவனம், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு, ‘பயோ-ஸ்டேடிஸ்டிக்ஸ்’ பயிற்சியையும் வழங்குகிறது. மேலும், இக்கல்வி நிறுவனம், சென்னை பல்கலைக்கழக அங்கீகாரத்துடன், எபிடமியாலஜி மற்றும் பயோ-ஸ்டேடிஸ்டிக்ஸ் துறையில் பிஎச்.டி., படிப்பையும் வழங்குவகிறது.
விபரங்களுக்கு: http://nie.gov.in/

Source:  Dinamalar

  

Income Tax 2018-19 – Form 12BB – Salaried Employees to submit details of savings, housing loan, deductions to employer

Income Tax 2018-19 – Section 192 2(D) – All Salaried Employees to declare deductions and savings under Form 12BB – Download Form 12BB as a Word, Excel or PDF file- All Employees to file Declaration under Form 12BB to claim deduction for savings under Section 80 C, payment of house loan interest under Section 24, and HRA exemption under Section 10

The Finance Act, 2015 had introduced section 192(2D) of the Income-tax Act, 1961 (the Act) wherein the person responsible for making payment of salary (employer) was obliged to collect the necessary evidence or proof in the prescribed form and manner to allow any claim for any deduction and/or tax saving investments. However, the relevant rules and form were yet to be prescribed. The Central Board of Direct Taxes (CBDT) has come out with the relevant rules1 and also prescribed the form i.e. Form 12BB, in which salaried employees would now be required to furnish evidence of claims and tax saving investments to the employer.
Download Form 12BB as a PDF file for declaring your deductions and savings to your Employer
Download Form 12BB as a Word File
Download Form 12BB as Excel File

Income Tax 2018-19 – Changes for Salaried Employees and Pensioners

Income Tax 2018-19 – How various income earned by Salaried Employees treated under Income Tax ?
Till Finance Act 2016, there was no standard format for salaried employees for filing declaration with their employer to claim deduction for savings under Section 80 C, payment of house loan interest under Section 24, and HRA exemption under Section 10. In the absense of single declaration form, employees had to submit proof for each investment made in the year.
GConnect Income Tax Calculator 2018-19 for Central Government Employees
As a relief to employees and also to employer, Income Tax Department has introduced a new Form 12BB. This form, applicable from June 1, 2016, will act as a single entity that you can use to declare your to claim deduction for savings under Section 80 C, payment of house loan interest under Section 24, and HRA exemption under Section 10.

Also Read

Income Tax

IT department proposes online filing of tax exemption application

Oct 31, 2018

Income Tax

GConnect Income Tax Calculator 2018-19 for Central Government Employees

Oct 20, 2018

Deductions that can be declared under Form 12BB:

The standard Form 12BB is for all salaried Employees to claim tax deductions. You use can use it to claim deductions for leave travel allowance (LTA/LTC), house rent allowance (HRA), interest paid on home loans, and all other tax deductions pertaining to Chapter VI-A of the Income Tax Act.

House Rent Allowance (HRA):

With form 12BB, you can claim any HRA tax deductions under Section 10 (13A) of the Income Tax Act. Along with 12BB you will need to provide the relevant rent receipts for this deduction. You will also need to submit the name and address of the landlord. In the event the aggregate rent paid by you exceeds Rs 1 lakh, you will also need to submit the Permanent Account Number (PAN) of your landlord.

Amount claimed under Leave travel Concession (LTC)

With Form 12BB, you need to furnish amount and provide evidence of expenses made towards your travel. Unlike in the past, it is now mandatory to provide proof of all travel expenses in the form of receipts for your claim.

Interest on home loan under Section 24:

Earlier to claim deduction for interest paid on home loan, we have to submit interest certificate from the concerned bank. Now, in addtion to the same we will have to fill up Form 12BB to claim deductions under Section 24 of the Income Tax Act.

Savings / deductions under Chapter VI-A:

All tax deductions under Section 80C, Section 80CCC, and Section 80CCD, as well as other sections like 80E, 80G, and 80TTA come under Chapter VI-A of the IT Act. For deductions, fill up Form 12BB and provide details and proof of your investments and expenditures incurred related to the relevant section you are seeking deductions under relevant income tax provisions.

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமை (நவ. 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமை (நவ. 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPGTA KARUR செயலி அறிமுகம்




ஆசிரியர் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் கரூர் மாவட்ட    tnpgta பின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிறு அன்று கரூரில் நடைபெற்றது .

இந்த செயற்குழு கூட்டத்தில் கரூர் மாவட்டத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பெருமக்கள்  பயன்பெறும் வகையில்
நாள்தோறும்  தேர்ந்தெடுக்கப்பட்ட  கல்விச்செய்திகள், சிறப்புக்கட்டுரைகள், முக்கிய அரசாணைகள், 10,11,12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, போட்டித்தேர்விற்கான வழிகாட்டுதல்கள், மாதிரி வினாத்தாள்கள், தன்னம்பிக்கை,  வேலைவாய்ப்புத் தகவல்கள், உடல்நலக்குறிப்புகள்….     
என அனுதினமும் உங்கள் விரல்நுனிக்கு தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் எமது கரூர் மாவட்ட TNPGTA வின்  இணைய தள சேவைக்கான TNPGTA KARUR என்கிற மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. 

இந்த ஆப்பை கரூர் மாவட்ட tnpgta ன் மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன்  வடிவமைத்துள்ளார்.

இந்த மொபைல் ஆப்பை இதுவரை 227 பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


 பின்வரும் லிங்க்கை கிளிக் செய்து, TNPGTA KARUR ஆப்பை டவுன்லோடு செய்து, செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



அல்லது 

திரையில் தோன்றும் இந்த படங்களில் உள்ள பெரியார் கோடை ஸ்கேன் செய்வதன் மூலமும் மொபைல் ஆப் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Wednesday, November 21, 2018

ஒற்றுமைக்காகவா? அல்லது ஒற்றுமையை சீர்குலைப்பதற்காகவா?

*ஜேக்டோ ஜியோவில்  சில சங்கங்கள் மீண்டும் இணைந்தது ஒற்றுமைக்காகவா? அல்லது ஒற்றுமையை சீர்குலைப்பதற்காகவா?*

ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.

ஜேக்டோ மற்றும் ஜேக்டோ ஜியோ என இரண்டு போராட்ட முறைகளிலும் ஏதேதோ காரணங்களைச் சொல்லி இடையில் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பிரிந்து சென்றவர்கள்,  இன்று மீண்டும் ஜேக்டோ ஜியோ வில் இணைந்திருப்பது ஒருவகையில் மகிழ்ச்சி என்றாலும்,  இன்னொரு வகையில் அது நிறைய சந்தேகங்களை எழுப்பி கொண்டு இருக்கிறது.

ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் உள்ள பல சங்கங்களில் சில  லெட்டர்பேடு அளவிற்கு பல மாவட்டங்களில் உள்ளது.

உறுப்பினர்கள் பெயரளவில்  இருக்கும் சில மாவட்டங்களில்,  லெட்டர் பேடு சங்கமாக  இருக்கும் சில சங்கங்கள், மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை ஏற்றிருப்பது ஜேக்டோ ஜியோ போராட்டத்தை சீர்குலைப்பது போன்று உள்ளது.

மேலும் சில சங்கங்கள் போராட்டத்தில் வெற்றி என்ற நோக்கத்தை காட்டிலும்,  தொடர்ந்து சங்கம் நடத்த வேண்டும் என்பதற்காகவே மீண்டும் ஜேக்டோ ஜியோவில் இணைந்தது போல உள்ளது.

*எது எப்படியோ இந்த சங்கங்கள் தொடர்ந்து வந்தாலும் சரி.  பாதியில் பிரிந்து சென்றாலும் சரி,  நாம் நமக்காக போராடுவோம்* என்ற அடிப்படையில் சங்கங்களை தாண்டி தொடர்ந்து ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு நமக்கான உரிமைகளை வென்றெடுப்போம் நண்பர்களே.

நன்றி,

மூ.மகேந்திரன்,
மாவட்ட செயலாளர்,
TNPGTA, கரூர்.

Tuesday, November 20, 2018

ATM Pin நம்பர் இன்றி டெபிட் கார்டில் பணம் எடுப்பது சாத்தியமா? வங்கி அதிகாரிகள், வல்லுநர்கள் விளக்கம்

சமூக வலைதளங்களில் வைர லாக பரவி வரும் வீடியோ ஒன்றில், பின் நம்பர் போடாமலேயே ஒருவரது டெபிட் கார்டிலிருந்து பணம் எடுக்க முடிவதாகக் கூறுவது சாத்தியமா என்பது குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ‘பாயின்ட் ஆப் செல்லிங்’ (பிஓஎஸ்) என்ற கருவி மூலம் ஒருவரது டெபிட் கார்டில் இருந்து பின் நம்பரை பதிவு செய்யாமலேயே பணம் எடுப்பது போன்று காட்சி பதிவாகி யுள்ளது. அத்துடன், பேன்ட் பாக் கெட்டில் மணிபர்சுக்கு உள்ளே வைத்திருக்கும் கார்டை வௌியே எடுத்து பிஓஎஸ் கருவியில் வைத்து தேய்ப்பதற்கு (ஸ்வைப்) பதிலாக, பிஓஎஸ் கருவியை டெபிட் கார்டு வைக்கப்பட்டுள்ள பேன்ட் பாக்கெட் அருகில் எடுத்துச் சென்றாலே அவரது கார்டில் இருந்து பணம் எடுக்கப்படுவதாக அந்த வீடியோவில் காட்சி இடம் பெற்றுள்ளது.இவ்வாறு பின் நம்பர் இன்றி ஒருவரது கார்டில் இருந்து பணம் எடுக்க முடியுமா? என்பது குறித்து வங்கி அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, “பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு மின்னணு பரிவர்த் தனையை அதிக அளவில் ஊக்கப்படுத்தி வருகிறது. இத னால், தற்போது நூற்றுக்கு 80 சதவீத பணப் பரிவர்த்தனைகள் மின்னணு முறையில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.எனவே, பொதுமக்கள் தாங்கள் மின்னணு முறையில் மேற்கொள் ளும் பணப் பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக வங்கிகள் தரப்பில் இருந்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சி நம்பகத் தன்மையற்றதாக உள்ளது என்றார்.இதுகுறித்து, எல்டி சாப்ட்வேர் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன மூர்த்தி என்பவர் கூறும்போது, “ப்ரீபெய்டு கார்டில் மட்டும்தான் பின் நம்பர் போடாமலேயே அதில் இருந்து பணம் எடுக்க முடியும். அதுவும் கூட அதிகபட்சமாக ரூ. 2 ஆயிரம் வரைதான் எடுக்க முடியும்.மேலும், ஒருவர் தனது டெபிட், கிரெடிட் கார்டுகளில் பின் நம்பரை போடாமலேயே பணம் எடுக்கும் வசதியை தேர்வு செய்தால் கூட அதை வங்கிகள் அனுமதிக்காது. காரணம், ரிசர்வ் வங்கியின் விதிகள் மிகவும் கடுமையாக உள்ளன. எனவே, இதுபோன்ற மோசடிகள் நிகழ்வதற்கு முன்பே அதைத் தடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும், ஒருவர் தனது பாக்கெட்டில் இத்தகைய ப்ரீபெய்டு கார்டு வைத்திருக்கும்போது, யாரும் அவருக்குத் தெரியாமல் அவர் அருகில் பிஓஎஸ் கருவியை கொண்டு சென்று பணம் எடுக்க முடியாது. எனவே, வீடியோவில் காண்பிப்பது போன்று அவ்வளவு எளிதில் வந்து பணத்தை எடுக்க முடியாது.இன்றைய காலகட்டத்தில் இணையதளம் மூலம் நாம் மேற் கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த் தனைக்கும் நமது செல்போனுக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய ரகசிய எண்ணைப் (ஓடிபி) பயன்படுத்திதான் பரிவர்த்த னையை மேற்கொள்ள வேண்டி யுள்ளது. எனவே, அத்தகைய பாது காப்பு அம்சங்கள் கடைப் பிடிக்கப் பட்டு வரும் வேளையில் இந்த வீடியோவில் இடம் பெறும் காட்சி களைக் கண்டு பொதுமக்கள் அச் சப்படத் தேவையில்லை” என்றார்.

அரசு ஊழியர் விடுப்பு : புதிய சலுகைகள் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, சில சலுகைகள் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் விபரம்:l சின்னம்மை, தட்டம்மை, பன்றிக்காய்ச்சல், பிளேக், ரேபிஸ் போன்றவை, தொற்று நோய்களாக கருதப்படுவதால், அவற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள், கூடுதல் நாட்கள், தற்செயல் விடுப்பு எடுக்க, அரசு அனுமதி அளித்துள்ளதுl சின்னம்மை மற்றும் தட்டம்மை பாதிப்புக்கு, ஏழு நாட்கள்; பன்றிக்காய்ச்சலுக்கு, ஏழு முதல், 10 நாட்கள்; பிளேக், ரேபிஸ் போன்றவற்றுக்கு, 10 நாட்கள் வரை, தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பை பெற, நகராட்சி, மாநகராட்சி அல்லது மாவட்ட சுகாதார அலுவலர் சான்றிதழ் அளிக்க வேண்டும்l குழந்தையை தத்தெடுக்க அளிக்கப்படும் விடுப்பு, 180 நாட்களிலிருந்து, 270 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதுl அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, முதல் பிரசவத்தில், இரட்டை குழந்தைகள் பிறந்தால், அவர்கள் இரண்டாவது பிரசவத்திற்கு, பேறுகால விடுப்பு எடுத்து கொள்ளவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவற்றுக்கான அரசாணையை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், ஸ்வர்ணா பிறப்பித்துள்ளார்.

ந.க எண், மூ.மு எண் என்றால் என்ன?

ந.க எண், மூ.மு எண் என்றால் என்ன?

- அரசு ஊழியர்களின் கடித எண்கள் விளக்கம்அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.  ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநில அரசு ஊழியர்களின் கடித எண்கள் மிகமுக்கியமானவை என்பதால், அதுகுறித்து முதலில் தெரிந்து கொள்வது கட்டாயமாகும்.

ந.க எண் = நடப்புக் கணக்கு எண்

ஓ.மு. எண் = ஓராண்டு முடிவு எண்

மூ.மு எண் = மூன்றாண்டு முடிவு எண்

நி.மு. எண் = நிரந்தர முடிவு எண்

ப.மு. எண் = பத்தாண்டு முடிவு எண்

தொ.மு எண் = தொகுப்பு முடிவு எண்

ப.வெ எண் = பருவ வெளியீடு எண்

நே.மு.க எண் = நேர்முகக் கடித எண்

இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட ஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது, நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை விரைந்து சொல்லவேண்டும்.

இவ்வெண்களில் எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும், தனிப்பட்ட முறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் ஊழியப்பதிவேட்டில் பதியாமல் அரசூழியர்கள் அனுப்பிய கடிதம் என்றே பொருள். இதுவே, அவ்வூழியர் தனது ஊழியத்தில் கடமை தவறியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமானது.

ஆன்லைனில் ஆசிரியர் பயிற்சி

கேரளா மாநிலத்தில் கல்வி முறையை முழுவதும், &'டிஜிட்டல்&' மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.இதற்கான திட்டங்களை, &'கைட்&' எனப்படும், கேரள கல்வியியல் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தற்போது, கூல்எனப்படும், ஆன்லைன் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதிகாரிகள் கூறியதாவது:ஆசிரியர் பயிற்சி பெறுவோர், 45 மணி நேர கம்ப்யூட்டர் பயிற்சியை பெறுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந் நிலை யில், கூல் எனப்படும் ஆன்லைன் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்ய உள் ளோம். இந்த பயிற்சியில், ஆசிரியர்கள், மாணவர் கள், பொதுமக்களும் பங்கேற்கலாம். முதல்கட்ட மாக, ஆசிரியர்களுக் கான பயிற்சி வகுப்புகள், அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் சேருவதற்கு, 5,000ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.முதல்கட்டமாக, 2,500 பேருக்கு, ஆறு வார பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.இந்த பயிற்சி வகுப்பில், அடிப்படை கம்ப்யூட்டர் பயன்பாடு, படங்களை திருத்துவது, வீடியோவை திருத்துவது, மலையாளத்தில், &'டைப் பிங்&' செய்வது, இன்டர்நெட் பயன்படுத்துவது, கல்வியியல் தொடர்பான இணைய பக்கங் களை எப்படி பயன்படுத்துவது போன்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியை மேற்கொள் வோருக்கு, சான்றிதழ் அளிக்கப்படும். அடுத்த கட்டமாக, மாணவர் கள், பொதுமக்களுக்கான பயிற்சி திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சித்தா, ஆயுர்வேத படிப்புக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்

சென்னை: தமிழகத்தில் உள்ள, ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆகிய படிப்புளுக்கு, 390 இடங்கள் உள்ளன. மேலும், 23 தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீடுக்கு, 1,423 இடங்கள் உள்ளன.இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது.

இந்த படிப்புகளில் சேர, 4,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இதில், 3,566 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றனர்

இந்நிலையில், 2018 - 19க்கான மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம், அரசு சித்தா கல்லுாரி வளாகத்தில், நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், 57 இடங்களுக்கு, 97 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 23 பேர் இடங்கள் பெற்றனர். மீதமுள்ள, 34 இடங்கள் பொது பிரிவில் சேர்க்கப்பட்டன.சிறப்பு பிரிவில் இடங்கள் பெற்ற மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கமிஷனர் செந்தில்ராஜ் வழங்கினார். பிற்பகலில், பொதுப்பினருக்கான கவுன்சிலிங் நடந்தது. இந்த கவுன்சிலிங்கில், 704 மாணவர்கள் பங்கேற்றனர்.

கவுன்சிலிங், 23ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

இன்றைய அண்ணா பல்கலை தேர்வுகள் ரத்து

சென்னை : கஜா புயல் காரணமாக, அண்ணா பல்கலை இணைப்புக் கல்லூரிகளுக்கான இன்றைய(நவ.,20) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ரத்தாகும் தேர்வு டிச., 17ம் தேதி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22ம் தேதி முதல், இன்ஜி., கல்லூரிகளுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

இதேபோல் இன்று நடக்கவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் பாதிப்பு: 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை : புயல் பாதிப்புக்குள்ளான நாகை, புதுக்கோட்டையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் தீப தேரோட்டத்தையொட்டி இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

சுலப தொழில் நாடுகளில் 'டாப் - 50' இந்தியா: மோடி


புதுடில்லி : ''உலகளவில், சுலபமாக தொழில் புரியும் 'டாப் - 50' நாடுகளில் ஒன்றாக, இந்தியாவை உயர்த்துவதே லட்சியம்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர், டில்லியில், தொழிலதிபர்கள் கூட்டத்தில் மேலும் பேசியதாவது:இந்தியாவில், சிவப்பு நாடா முறையால், தொழில் துவங்குவது கடினமாக இருந்தது. அரசின் கொள்கைகள் முடங்கிக் கிடந்தன. கடந்த, 2014ல் நான் பிரதமராக பதவியேற்ற போது, உலக வங்கியின் அறிக்கைப்படி, சுலபமாக தொழில் புரியும் வசதி உள்ள, 190 நாடுகளில், இந்தியா, 142வது இடத்தில் இருந்தது.

என் தலைமையிலான மத்திய அரசு, கொள்கை முடக்கத்திற்கு முடிவு கட்டியது. கொள்கை சார்ந்த நிர்வாக நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது. தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. இதனால், தொழில் புரிவது சுலபமானது.கடந்த நான்கு ஆண்டுகளில், மேற்கொள்ளப்பட்ட தீவிர கொள்கை திட்டங்களால், இந்தியா, சுலபமாக தொழில் புரியும் நாடுகளில், 65 இடங்கள் முன்னேறி, 77வது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்து, இந்தியாவை, 'டாப் - 50' நாடுகளில் ஒன்றாக முன்னேறச் செய்ய வேண்டும்; நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்பதே என் இலட்சியம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Monday, November 19, 2018

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்







தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூர் ஜெய்ராம் வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்   18.11.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இச்செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு கே.பி.ஓ. சுரேஷ் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட தலைவர் திரு.கோ.இளங்கோ வரவேற்புரை வழங்கினார்.

 இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவு கொண்டு வருதல்.
2. 21 மாத ஊதியக்குழு நிலுவை பெறுதல் .
3.CPS பென்சன் திட்டத்தை ஒழித்தல்.
4.ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் கோருதல்.
5. நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடைபெறும் முறைகேடான பணியிட மாறுதலை தடுத்தல்.
6.வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் நடைபெறும் ஜேக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கெடுப்பது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூர் ஜெய்ராம் வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்   18.11.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இச்செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு கே.பி.ஓ. சுரேஷ் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட தலைவர் திரு.கோ.இளங்கோ வரவேற்புரை வழங்கினார்.

 இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவு கொண்டு வருதல்.
2. 21 மாத ஊதியக்குழு நிலுவை பெறுதல் .
3.CPS பென்சன் திட்டத்தை ஒழித்தல்.
4.ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் கோருதல்.
5. நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடைபெறும் முறைகேடான பணியிட மாறுதலை தடுத்தல்.
6.வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் நடைபெறும் ஜேக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கெடுப்பது.
 

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்,பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்வித்துறை செய்திகளை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கரூர் மாவட்ட அமைப்பின் சார்பாக மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. நிறைவாக மாவட்ட செயலாளர் திரு.மூ.மகேந்திரன் நன்றியுரை வழங்கினார்.



இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்,பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்வித்துறை செய்திகளை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கரூர் மாவட்ட அமைப்பின் சார்பாக மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. நிறைவாக மாவட்ட செயலாளர் திரு.மூ.மகேந்திரன் நன்றியுரை வழங்கினார்.