Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, November 21, 2018

ஒற்றுமைக்காகவா? அல்லது ஒற்றுமையை சீர்குலைப்பதற்காகவா?

*ஜேக்டோ ஜியோவில்  சில சங்கங்கள் மீண்டும் இணைந்தது ஒற்றுமைக்காகவா? அல்லது ஒற்றுமையை சீர்குலைப்பதற்காகவா?*

ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.

ஜேக்டோ மற்றும் ஜேக்டோ ஜியோ என இரண்டு போராட்ட முறைகளிலும் ஏதேதோ காரணங்களைச் சொல்லி இடையில் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பிரிந்து சென்றவர்கள்,  இன்று மீண்டும் ஜேக்டோ ஜியோ வில் இணைந்திருப்பது ஒருவகையில் மகிழ்ச்சி என்றாலும்,  இன்னொரு வகையில் அது நிறைய சந்தேகங்களை எழுப்பி கொண்டு இருக்கிறது.

ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் உள்ள பல சங்கங்களில் சில  லெட்டர்பேடு அளவிற்கு பல மாவட்டங்களில் உள்ளது.

உறுப்பினர்கள் பெயரளவில்  இருக்கும் சில மாவட்டங்களில்,  லெட்டர் பேடு சங்கமாக  இருக்கும் சில சங்கங்கள், மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை ஏற்றிருப்பது ஜேக்டோ ஜியோ போராட்டத்தை சீர்குலைப்பது போன்று உள்ளது.

மேலும் சில சங்கங்கள் போராட்டத்தில் வெற்றி என்ற நோக்கத்தை காட்டிலும்,  தொடர்ந்து சங்கம் நடத்த வேண்டும் என்பதற்காகவே மீண்டும் ஜேக்டோ ஜியோவில் இணைந்தது போல உள்ளது.

*எது எப்படியோ இந்த சங்கங்கள் தொடர்ந்து வந்தாலும் சரி.  பாதியில் பிரிந்து சென்றாலும் சரி,  நாம் நமக்காக போராடுவோம்* என்ற அடிப்படையில் சங்கங்களை தாண்டி தொடர்ந்து ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு நமக்கான உரிமைகளை வென்றெடுப்போம் நண்பர்களே.

நன்றி,

மூ.மகேந்திரன்,
மாவட்ட செயலாளர்,
TNPGTA, கரூர்.