சென்னை : கஜா புயல் காரணமாக, அண்ணா பல்கலை இணைப்புக் கல்லூரிகளுக்கான இன்றைய(நவ.,20) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ரத்தாகும் தேர்வு டிச., 17ம் தேதி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22ம் தேதி முதல், இன்ஜி., கல்லூரிகளுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
இதேபோல் இன்று நடக்கவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.