Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, May 23, 2015

அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

கரூர் அரசு இசைப் பள்ளியில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது என தலைமையாசிரியர் ரேவதி, தெரிவித்தார். இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் ரேவதி, கூறியதாவது,

தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும், கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு, 17 ஆண்டாக இயங்கி வருகிறது. இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலை பிரிவுகளில் முழுநேர வகுப்பாக இசைக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. மூன்றாண்டு பயிற்சிக்கு பின், அரசுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது, 2015-2016ம் கல்வி ஆண்டுக்காக மாணவர் சேர்க்கை நடக்கிறது. இப்பள்ளியில் சேர, 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதசுரம், தவில் கற்றுக்கொள்ள எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
பன்னிரெண்டு வயதுக்கு மேல், 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு, 152 ரூபாய். தொலைவில் இருந்து வரும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு இலவசமாக தங்கும் விடுதி மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.தவிர, தமிழக அரசால் இசைக்கலை வளர இசைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ஊக்கத்தொகையாக, 400 ரூபாய் வழங்கப்படும். இசைப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசுத்துறை மற்றும் அறநிலையத்துறை கோவில்களில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. கலை ஆர்வமும், திரமையும் உள்ள மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, 944. ஜவஹர் பஜார், கரூர் என்ற முகவரியில் நேரிலும், 95002 77994, மற்றும் 95005 11847 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.