எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், கரூர் மாவட்டத்திலுள்ள 26 அரசுப் பள்ளிகள், நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன என கலெக்டர் தெரிவித்தார். கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாணவ, மாணவிகளை பாராட்டி நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயந்தி, பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் 7,221 மாணவர்கள், 6,827 மாணவிகள் என மொத்தம், 14,048 பேர் தேர்வு எழுதினர். இதில், 6,806 மாணவர்கள் மற்றும் 6,647 மாணவிகள் என மொத்தம், 13,453 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட 2.79 சாதவீதம் அதிகரித்து, 95.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கரூர் பரணி பார்க்க மெட்ரிக் பள்ளி மாணவி தேவதாநிலானி, அரவக்குறிச்சி ஆறுமுகம் மெட்ரிக் பள்ளி மாணவி தனபிரியா, ஆகிய இருவரும், 499 மதிப்பெண் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். அரவக்குறிச்சி ஆறுமுகம் மெட்ரிக் பள்ளி மாணவி அபிதா, வெண்ணைமலை கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவன் அசோக்குமார், பரணி பார்க் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யா, நிவேதா, சுபஸ்ரீ, கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவி கனகஸ்ரீ, காவ்யா, சேரன் மெட்ரிக் பள்ளி மாணவி தேவதர்ஷினி, ஆகிய எட்டு பேர், 498 மதிப்பெண்கள் பெற்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அனுஸ்ரீ. வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி, ஜெயபாரதி, காவ்யா, பவித்ரா, பிரியதர்ஷிணி, விஸ்வபாரதி, பரணி பார்க் மெட்ரிக் பள்ளி மாணவி மதுமித்ரா, ரசிகா, ரேஷ்மா, பாரதி மேல்நிலைப்பள்ளி மாணவி இலக்கியா, சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி சிவரஞ்சனி, உஸ்வத்துவன் உஹாசானா ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அப்ஷான் ஜூல்பா, ஆகிய 15 பேர் 497 மதிப்பெண் பெற்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். கரூர் மாவட்டத்தில், 26 அரசு பள்ளிகள் உள்பட, 82 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. ரெங்கநாதம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வினிதா, 495 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா, குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி, கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜீவன்குமார், நொய்யல் ஈ.வெ.ரா., அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி, கோவிலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சங்கவி, புன்னம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவன் கார்த்திக் ஆகியோர், 491 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றனர்.
சின்னதாராபுரம் அரசுப்பள்ளி மாணவி சந்தியா, கிருஷ்ணராயபுரம் அரசுப்பள்ளி மாணவி இந்துமதி, க.பரமத்தி அரசுப்பள்ளி மாணவி பிரபா, கோவிலூர் அரசுப்பள்ளி மாணவன் மோகனசெல்வம், ஆகியோர், 490 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றனர். தமிழில் ஒருவர், ஆங்கிலம்-13 பேர், கணதம்- 406 பேர், அறிவியல்- 2,384 பேர், சமூக அறிவியல்- 1,231 பேர், நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மாநில அளவில் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், பள்ளியின் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.