Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, May 23, 2015

அசத்தல் : அரசு துவக்கப் பள்ளி மாணவர்கள்...கணினியை கையாள்வதில் சாதனை

மயிலம் அடுத்த கோபாலபுரம் அரசு பள்ளி மாணவர்கள் கணினியை கையாள்வதில் அசாத்திய திறமை பெற்று விளங்குகின்றனர்.
மயிலம் ஒன்றியம் கோபாலபுரம் அரசு துவக்கப் பள்ளியில் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 20 மாணவர்கள், கண்களை துணியால் கட்டி கொண்டு, தவறு இல்லாமல் மற்ற மாணவர்கள் சொல்லும் தமிழ், ஆங்கில வார்த்தைகளை கணினி கீ போர்டில் டைப் செய்கின்றனர்.
இங்கு முதல், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாக தமிழில் கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைமையாசிரியர் திருமலைசாமி தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் 30 ஆயிரம் ரூபாய் செலவில் பள்ளிக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்துள் ளார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் கீ போர்டுகளை தனித்தனியாக வழங்கியுள்ளார். பள்ளியில் பயிலும் மாணவர்கள் தனித்திறனை மேம்படுத்திக் கொள்ள தலைமையாசிரியர், உதவியாசிரியர் கணபதிமோகன் இருவரும் சொந்த செலவில் மாணவர்களுக்கு இரண்டு புதிய மிதிவண்டி வாங்கி கொடுத்து, சைக்கிள் ஓட்டுவதற்கு பயிற்சியளித்து வருகின்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆசிரியர்கள் முயற்சியினால் கேரம்போர்டு, செஸ், கைப் பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டு, மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வியை புதுமையாக கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாடங்கள் கணினி மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்தும் மிக சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. மற்ற அரசு பள்ளிகளும் இதுபோன்று மாணவர்களின் திறனை வளர்த்தால், விழுப்புரம் மாவட்டம் கல்வியில் முதலிடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.