Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, September 09, 2016

குரூப் - 4 தேர்வு; 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

குரூப் 4 தொகுதியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (செப்.8) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 9 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு வரும் செப்.,14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு கட்டணம் செலுத்த செப்.16-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

www.tnpgtakarurdt.in