Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, September 09, 2016

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இன்சாட் 3 டி.ஆர்., செயற்கைக்கோள்!

:இந்திய தொழில்நுட்பத்தில் உருவான, 'கிரையோஜெனிக்' இன்ஜின் மூலம் இன்சாட்- 3 டி.ஆர்., செயற்கைக்கோள், நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில், இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' சார்பில், பருவநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறியும் தன்மையுடைய, இன்சாட்- 3 டி.ஆர்., என்ற, 2,211 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த செயற்கைக்கோள், 'ஜி.எஸ்.எல்.வி., -- எப் 5' ராக்கெட் மூலம் நேற்று மாலை, 4:50 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இரண்டா-வது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது; 17வது நிமிடத்தில், சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. 

* காலதாமதம் 


கிரையோஜெனிக் இன்ஜினில் ஆக்சிஜன் வாயு செல்லும் தரைப்பகுதியில் உள்ள குழாய் வால்வு சரியாக பொருந்தாத காரணத்தால், மாலை, 4:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்த ராக்கெட் நேரம் மாற்றப்பட்டது; சரி செய்யப்பட்டு, 40 நிமிடம் தாமதமாக, 4:50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 

அடுத்தது 'மார்க் 3' 

இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியதாவது: 

இந்தியா, விண்வெளி சாதனையில் மற்றொரு மைல் கல்லை அடைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நமது சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 

விரைவில், அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை சுமந்து செல்லக்கூடிய, 'மார்க் 3' ரக ராக்கெட்டுகளுக்கான, பெரிய அளவிலான, கிரையோஜெனிக் இன்ஜின்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன. 

இந்த ராக்கெட்டை குறுகிய காலத்தில் உருவாக்க, குறித்த நேரத்தில் உபகரணங்களை தந்து உதவிய, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார். 

www.tnpgtakarurdt.in