Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, January 25, 2017

திடீர் விடுமுறைகளால் தேங்கிய பாடங்கள்

பொங்கலுக்கு பின் அறிவிக்கப்பட்ட, திடீர் விடுமுறைகளை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, தினமும் கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 கடந்த டிசம்பரில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவரது மறைவு வரை, பல நாட்கள் திடீர் விடுமுறை அளிக்கப்பட்டது. பின், 'வர்தா' புயல் தாக்குதலால், பள்ளிகளுக்கு, மூன்று நாட்களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டது. பின், ஜனவரியில் நிலைமையை சமாளிக்கலாம் என, பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்த நிலையில், பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதோடு நிற்காமல், ஜல்லிக்கட்டு போராட்டம், பந்த் மற்றும் கலவரம் என, நான்கு நாட்கள் வரை, பள்ளிகள் முறையாக இயங்கவில்லை.அதனால், பல பள்ளிகளில் பாடங்கள் நடத்த முடியாமல், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 


மேலும், திருப்புதல் தேர்வு மற்றும் சிறப்பு பயிற்சியும் நடத்த முடியவில்லை. எனவே, நிலைமையை சமாளிக்க, தினமும் வழக்கமான காலை, மாலை சிறப்பு வகுப்புகளில், கூடுதலாக ஒரு மணி நேரம் பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளிலும், சிறப்பு வகுப்புகளை நடத்த, பள்ளிகள் முடிவு செய்து