பதவி உயர்வுக்காக காத்திருக்கும் மின்
வாரிய பொறியாளர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு
செய்துள்ளனர். தமிழக மின்வாரியத்தில் ஒரே நிலையில்
14 ஆண்டுகள் பணி முடித்த முதல் கிரேடு இளநிலை
பொறியாளர்களுக்கு, தற்சார்பு உதவி செயற்பொறியாளர்
பதவி உயர்வு வழங்கவேண்டும், உதவி மற்றும்
இளநிலை பொறியாளர்களை பொதுப்பெயரில் அழைக்க
வேண்டும், பதவி உயர்வு, பணியிட மாறுதல்களில்
விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உள்பட 8 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி இளநிலை பொறியாளர்கள்
போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற மின் வாரிய
தலைவருக்கு பரிந்துரைத்துள்ளதாக மின்துறை
அமைச்சர் உறுதியளித்திருந்தார். மாதங்கள் 9 கடந்தும்
கோரிக்கைகள் நிறைவேறவில்லை. இதனால் 33
ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இளநிலை
பொறியாளர்கள் பலர் பதவி உயர்வு இன்றி ஓய்வு
பெற்று விட்டனர். இதை கண்டித்தும், கோரிக்கைகளை
நிறைவேற்றக் கோரியும் உண்ணாவிரதம் இருக்க
முடிவுசெய்துள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்க மாவட்ட
செயலர் கதிர்வேல் கூறுகையில்,"" கடந்த ஓராண்டில்
நடத்திய போராட்டங்களுக்கு தீர்வு ஏற்படவில்லை.
அமைச்சர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற மின்
வாரியம் தயங்குகிறது.
இம்முறை தீர்வு காணப்படாவிடில் சென்னை மின்வாரிய
தலைமை அலுவலகம் முன் மார்ச் முதல் தொடர்ந்து
உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்,''
என்றார்.