பிரதமரின் மோடியின் தபால் தலையை துருக்கி
வெளியிட்டு கவுரவித்துள்ளது பிரதமர் மோடி கடந்த
ஆண்டு நவம்பரில் துருக்கி சென்று ஜி-20 நாடுகள் உச்சி
மாநாட்டில் கலந்து கொண்டார் . உலக நாடுகளுடன்
பிரதமர் மோடியின் ராஜதந்திரம் மற்றும் உலக
தலைவர்களிடம் அவரின் அணுகுமுறை உட்பட
பல்வேறு அம்சங்களை கருத்தி்ல் கொண்டு அவரை
கவுரவிக்கும் வகையில் துருக்கி தபால் தலையை
வெளியிட்டுள்ளது. துருக்கியின் கரன்சியான 2. 80
டர்கிஸ் லிரா மதிப்புள்ள இந்த தபால் தலையின் கீழ்
இந்திய தேசியக்கொடியும், பிரதமர் , குடியரசு இந்தியா
என்ற ஆங்கில எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உட்பட
30-க்கும் மேற்பட்ட தலைவர்களின் தபால் தலைகளும்
வெளியிடப்பட்டன. இதற்கான விழாவில் துருக்கி அதிபர்
ரீசெப் தைப்பி ஈர்டோனன் கலந்து கொண்டார்.