Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, February 06, 2016

மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் தேர்வு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர்
என்.எஸ்.பழனியப்பன், அனைத்து மாநில தலைமைச்
செயலாளர்கள், மத்திய எரிசக்தித் துறை செயலாளர்,
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர் உள்பட
பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில்
கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்
உறுப்பினர் பதவி ஒன்று கடந்த 20.9.15 அன்றிலிருந்து
காலியாக உள்ளது. இந்த உறுப்பினரை தேர்வு
செய்வதற்கான தேர்வுக் குழுவை தமிழக அரசு
ஏற்படுத்தியுள்ளது. காலியாக உள்ள அந்த இடத்துக்கு
தகுதியான நபர், மின்சார சட்டம் 2003–ன் அடிப்படையில்
தேர்வு செய்யப்படுவார்.
எனவே பொறியியல், நிதி, பொருளாதாரம், சட்டம் மற்றும்
மேலாண்மை ஆகிய விஷயங்களைக் கையாளும்
திறமையைக் கொண்ட அதிகாரியை உங்கள் தரப்பில்
முன்மொழியலாம். அந்த அதிகாரியின் விண்ணப்பம்,
‘‘கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு எரிசக்தித்
துறை, சென்னை தலைமைச் செயலகம் என்ற முகவரிக்கு
12–ந் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.