சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார்
மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர அனைத்து துறையிலும் கன்சல்டன்ட்கள்,
சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 50 வயதிற்குட்பட்ட கன்சல்டன்ட்கள் மற்றும்
சிறப்பு மருத்துவர்கள் சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி
தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் கன்சல்டன்ட் மருத்துவர்களுக்கு ரூ.4,25,000/ முதல்
ரூ.5,10,000 வரையிலும், சிறப்பு மருத்துவர்களுக்கு ரூ.2,89,000/ முதல்
ரூ.3,91,000/ வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம்
நிர்ணயிக்கப்படும்.
மேலும், இலவச விமான டிக்கெட், குடும்ப விசா, இருப்பிடம் மற்றும் சவுதி
அரேபிய அரசின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.
எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய
விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற ஈ மெயில் முகவரிக்கு உடனடியாக
அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி
மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் மற்றும் omcmanpower.com என்ற
இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.