Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, November 20, 2015

ஆசிரிய நண்பர்களே உஷார்..! நூதன மோசடி பேர்களின் கைவரிசை..!



 இன்று பிற்பகல் 3 மணிக்கு என்னோடு பணி புரியும் ஆசிரியையின் சகோதரருக்கு ஒரு போன் வந்துள்ளது. போனில் பேசிய நபர் RBI அலுவலகத்திலிருந்து பேசுவதாக தெரிவித்து விட்டு, அவரின் வங்கி கணக்கு எண், ATM CARD எண் என வரிசையாக கேட்டுள்ளார். அவரும் பேசுவது RBI அலுவலர் என நம்பி எல்லாத் தகவல்களையும் கூறியுள்ளார். இப்போது உங்கள் செல்போனுக்கு REFERENCE SMS  அனுப்பிள்ளோம். அதிலுள்ள எண்களை கூறுமாறு அந்த பலே பேர்வழி கேட்க, இவரும் சொல்லியுள்ளார்.

அடுத்த ஒரு நிமிடமே அவரின் வங்கி கணக்கிலிருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என அவரின் செல்லுக்கு மற்றுமொரு SMS வந்துள்ளது.
அதிர்ச்சியுடன் படித்த நண்பருக்கு தான் ஏமாற்றப்பட்டது அப்போதுதான் புரிந்தது..!!!

பாவம் சிறுக சிறுக சேர்த்த பணம் சில நிமிடங்களில் களவாடப்பட்டு விட்டது.
நீங்களும் உஷாராக இருங்கள் நண்பர்களே..!
ஏமாற்றுவோர் எந்த ரூபத்திலும் நம்மை ஏமாற்ற வரலாம்…!!!

                                                                                                                           - ப.கார்த்திகேயன், வணிகவியல் ஆசிரியர்.
                                                    அமேநிப, ஈசநத்தம், கரூர் மாவட்டம்.