Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, January 10, 2017

உதய் மின் திட்டத்தில் இணைந்தது தமிழகம்

உதய் மின் திட்டத்தில் 21வது மாநிலமாக தமிழகம் இணைந்துள்ளது. இது தொடர்பாக, ஒப்பந்தத்தில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று கையெழுத்திட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'உதய்' (உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ்) திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், 2015 செப்., வரை, மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள், அந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.