ஆந்திரா வங்கி ஒரு வருட முதுகலை
டிப்ளமோயில் வங்கியியல் மற்றும் நிதியியல் படிப்புக்கு அழைப்பு
விடுத்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆந்திர வங்கி இணையதளம்
மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதியாக அங்கீகாரம் பெற்ற பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 20 முதல் 28 வயது உள்ளவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு
மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 17-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் விநியோகம் தொடங்கப்படுகிறது.
நவம்பர் 27 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு ஆந்திரா வங்கி இணையதளத்தை பார்க்கலாம்.