Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, September 24, 2015

ஆயுள் காப்பீடு- ஒரு பார்வை

காப்பீடு பற்றி பெரும்பாலானோர் அறிந்து இருந்தாலும், ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவத்தை எத்தனை பேர் முழுமையாக உணர்ந்துஇருக்கின்றனர் என்பது கேள்விக்குறி தான்.பலரும் ஆயுள் காப்பீட்டை வரிச்சலுகைக்காக நாடுவது வழக்கமாக இருக்கிறது.
காப்பீடு, குடும்பத்திற்கான நிதி திட்டமிடலில் தவிர்க்க இயலாத முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை நிதி வல்லுனர்களும் ஆலோசகர்களும் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகின்றனர். ஆயுள் காப்பீடு தொடர்பாக, பலவித தவறான புரிதல்களும் இருக்கின்றன. ஆயுள் காப்பீடு தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இதோ:

ஆயுள் காப்பீடு யாருக்கு
பொதுவாக ஆயுள் காப்பீடு, 40 வயதுக்கும் மேலானவர்களுக்கு என்ற எண்ணம் இளம் வயதினர் மத்தியில் இருக்கிறது. ஆனால் இது சரியானது அல்ல. அசம்பாவிதம் யாரை வேண்டுமானாலும், எந்த வயதிலும் தாக்கலாம் என்பதால், இளம் வயதிலேயே காப்பீடு பெறுவது நல்லது. இதனால் பிரீமியம் குறைவாக இருப்பதோடு நீண்ட கால பாதுகாப்பையும் பெறலாம்.

நான் தனிக்கட்டை
குடும்ப பொறுப்பு உள்ளவர்களுக்கு தான் காப்பீடு தேவை, தனியாக இருப்பவருக்கு தேவையில்லை எனும் கருத்தும் இருக்கிறது. ஆயுள் காப்பீடு பாலிசிகள் பெரும்பாலும், 60 அல்லது 65 வயதில் முதிர்ச்சி அடைகின்றன. அப்போது பாலிசிதாரருக்கு கணிசமான தொகை கிடைக்கும். இது ஓய்வு பெறும் காலத்தில் கைகொடுக்கும்.

வரிச்சலுகைக்கான வழி
பெரும்பாலானோர் வரிச்சலுகைக்காக காப்பீட்டு திட்டங்களை வாங்குகின்றனர்.வரிச்சலுகை கிடைப்பது உண்மை தான் என்றாலும் காப்பீட்டின் ஆதார பலன் இது அல்ல; எதிர்பாராத மரணத்தின் போது பாதுகாப்பு அளிப்பதே உண்மையான அரணாகும். வரிச்சலுகை கூடுதல் பலன் அவ்வளவே. எனவே ஒருவர் தனக்கு தேவைப்படக்கூடிய அளவு காப்பீடு பெற வேண்டும்.

நிறுவன காப்பீடு
பணியாற்றி கொண்டிருப்பவர்களில் பலரும், நிறுவனங்கள் அளிக்கும் குழு காப்பீடே போதுமானது என, நினைக்கின்றனர். ஆனால் வேலை மாறும் அல்லது வேலை இழக்கும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? எனவே காப்பீடு எடுத்துக்கொள்வது நிரந்தர பாதுகாப்பு.

ஏஜன்ட் மீது நம்பிக்கை
காப்பீடு பெறுவது மட்டும் அல்ல, ஒருவர் தன் நிலைக்கு ஏற்ற காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். காப்பீடு முகவருக்கு எல்லாம் தெரியும் என்று நம்பி, அவர் சொல்லும் திட்டங்களை தேர்வு செய்யக்கூடாது.

முதலீடா?
காப்பீட்டை முதலீட்டுடன் சேர்ந்து குழப்பிக்கொள்ளக்கூடாது. வேண்டிய நேரத்தில் பணத்தை எடுத்துக்கொள்ள முடியாது, அல்லது திரும்ப கிடைக்கும் பலன் அதிகம் இல்லை போன்ற வாதங்கள் சரியல்ல. காப்பீட்டின் அடிப்படை நோக்கம் உங்கள் வாழ்க்கையின் பாதுகாப்பு!