Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, December 02, 2016

அண்ணா பல்கலை.யின் இன்றைய தேர்வும் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அதன் இணைப்புக் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.2) நடக்க இருந்த பருவத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடா புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பல்கலைக்கழகத் துறைகளுக்கும், இணைப்புக் கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமை (டிச.1) நடத்தப்பட இருந்த பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தேர்வு டிசம்பர் 24 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத் துறைகளுக்கும், இணைப்புக் கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை (டிச.2) நடத்தப்பட இருந்த தேர்வையும் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 23 ஆம் தேதி நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.