அம்பேத்கர் சட்ட பல்கலை பேராசிரியர் நியமனம், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது.
அம்பேத்கர் சட்ட பல்கலையில், 31 துறைகளில், உதவிப் பேராசிரியர் பணிக்கு, ஆக., 18ல் அறிவிப்பு வெளியானது; செப்., 16 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 600க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். நவ., 18 முதல் 22 வரை, நேர்முகத் தேர்வு நடத்த முடிவானது.
இந்நிலையில், பேராசிரியர் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை என, கவர்னர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. இதைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வு நிறுத்தப்பட்டு, 17ம் தேதி இரவு, விண்ணப்பதாரர்களுக்கு மொபைல் போனில் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.