பிளஸ் 2 துணைத் தேர்வு, மறுகூட்டல் முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான முடிவு, நேற்று வெளியானது. தேர்வுத் துறையின்,www/tndge.in என்ற இணையதளத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம்.
’பதிவெண் இல்லாதவர்கள், ஏற்கனவே உள்ள மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என, எடுத்துக் கொள்ள வேண்டும். ’மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்’ என, தேர்வுத் துறை இயக்ககம் கூறியுள்ளது.