Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, January 12, 2016

"மகப்பேறு சஞ்சீவி' திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்

மகப்பேறு காலத்தில் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்துக்காக 11 மூலிகை மருந்துகள் வழங்கும் அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
 சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
 இந்தத் திட்டத்தின் கீழ் கர்ப்ப காலத்தை மூன்று மூன்று மாதங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மருந்துகள் வழங்கப்படும்.
 கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் வரும் வாந்தி, மயக்கம் போன்றவற்றைத் தவிர்க்க மாதுளை மணப்பாகு, கருவேப்பிலை பொடியும், அடுத்த மூன்று மாதங்களின்போது இரும்புச் சத்து, வைட்டமின் சத்து குறைபாடை நீக்க அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஏலாதி சூரண மாத்திரை ஆகியவை வழங்கப்படும்.
 கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றைக் குறைக்க உளுந்து தைலம், சுகப்பிரசவத்துக்கு குந்திரிக தைலம், பாவன பஞ்சங்குல தைலம் வழங்கப்படும்.
 பிரசவத்துக்குப் பின்: குழந்தை பிறந்த உடன் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சதாவேரி லேகியம், இடுப்புவலி, கை கால் வலிக்கு பிண்ட தைலம், குழந்தையின் ஆரம்ப கால நோய்களை சமாளிக்க உரை மாத்திரை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். ரூ. 10 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 5 கர்ப்பிணிகளுக்கு இந்த மருந்துகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


www.tnpgtakarurdt.blogspot.in