Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, January 12, 2016

மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்த கல்லூரி மாணவி: 1,700 கி.மீ. தொலைவை 19 நாள்களில் நிறைவு செய்து சாதனை

பெண் வன்கொடுமையைத் தடுக்க வலியுறுத்தி, மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தொடங்கிய சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
 மும்பை பன்வேல் பகுதியைச் சேர்ந்தவர் பிரிசில்லா (24). இவர், அங்குள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைத் தடுக்க வலியுறுத்தி தன்னந்தனியாக சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
 இதையடுத்து, தனது சைக்கிள் பயணத்தை கடந்த டிசம்பர் 24ஆம் தேதி மும்பையில் தொடங்கினார். 19 நாள்களில் 1,700 கி.மீ. பயணம் செய்து தனது பயணத்தை வெற்றிகரமாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் நிறைவு செய்தார். அப்போது அவரது உறவினர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர்.
 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பிரிசில்லா கூறியதாவது: இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு நிலைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், பெண்களை அடிமையாக நடத்தும் செயல்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது கவலை தருவதாக அமைந்துள்ளது. பெண்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்களைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னந்தனியாக சைக்கிளில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தேன்.
 சிறுவயது முதலே சைக்கிளில் பயணம் செய்வது பிடிக்கும் என்பதால் தைரியமாக இரவு, பகல் பாராது பயணத்தைத் தொடர்ந்தேன். வரும் வழியில் எனக்கு எவ்விதப் பிரச்னையும் ஏற்படவில்லை. பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவியரை நேரில் சந்தித்து உரையாடினேன்.
 மும்பையில் இருந்து பெங்களூரு, விசாகப்பட்டினம், ஓசூர், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை வழியாக 19 நாள்களில் எனது பயணத்தை நிறைவு செய்துள்ளேன். கன்னியாகுமரியில் இருந்து ரயில் மூலம் மும்பை செல்ல உள்ளேன் என்றார் அவர்.



www.tnpgtakarurdt.blogspot.in