பி.இ., படிக்க 1.40 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. 1.90 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இதில் 1.40 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட 35 ஆயிரம் குறைவு எனவும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.