தமிழகத்தில் அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணம் எடுக்க ஏடிஎம்-களில் மக்கள் மொத்தமாக கூடுவதால் ஏடிஎம்.,கள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு விடுமுறை :
மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறையாகவும், ஒன்றாது, மூன்றாவது சனிக்கிழமைகள் வேலைநாளாகவும் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி நான்காவது சனிக்கிழமையான இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை தினமாகும். எனவே, வங்கிக் கிளைகள் அனைத்தும் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இனி திங்கள் கிழமை அன்றே செயல்படும்.
வங்கிக் கிளைகள், ரிசர்வ் வங்கி அலுவலகம் ஆகியவை இரண்டு நாட்கள் செயல்படாது என்பதால், பணம் எடுப்பதற்காக ஏடிஎம்-களில் மக்கள் மொத்தமாக கூடுவார்கள். இதன் காரணமாக ஏடிஎம் மையங்கள் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.