தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், பல கட்டங்களாக, 42.6 லட்சம் லேப் - டாப்கள் வழங்கப்பட்டன. சட்டசபை தேர்தல் அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவசமாக, 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கப்படும்' என, அ.தி.மு.க., அறிவித்தது. தற்போது, ஆட்சிக்கு வந்த பின், இலவச இன்டர்நெட் பற்றி முடிவெடுப்பதில், தாமதம் ஏற்பட்டுஉள்ளது.

அதனால், லேப் - டாப் கொள்முதல் பற்றிய அறிவிப்பை வெளியிடாமல், அரசு நிறுத்தி வைத்துள்ளது. இப்போது, முதலில் லேப் - டாப்களை கொள்முதல் செய்து விடலாம்; அப்புறம், இலவச இன்டர்நெட் இணைப்பு பற்றி யோசிக்கலாம் என, அரசு முடிவெடுத்து உள்ளது.