ராமநாதபுரம்: டேக்வாண்டோ தேசிய போட்டியில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 10 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான டேக்வாண்டோ மாநில தெரிவு போட்டி ராமநாதபுரத்தில் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த 14 வயதிற்குட்டவர்களுக்கான பிரிவில் பல்வேறு எடை பிரிவுகளில் 11 மாணவிகள் தேசிய போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
நேற்று 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான தெரிவு போட்டி நடந்தது. இதில், 25 கிலோ எடை பிரிவில் சேலம் வடுகாத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.மஞ்சு, 35, 38 கிலோ எடை பிரிவுகளில் கோத்தகிரி எச்.ஆர்.எம்.மெமோரியல் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சவுமியா, கே.அபிதா, 41கிலோ எடை பிரிவில் கோத்தகிரி விஸ்வசாந்தி வித்யாலயா பள்ளி மாணவி எம்.சபீதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
44 கிலோ எடை பிரிவில் கோவை விக்னேஷ்வரா வித்யாலயா பள்ளி மாணவி எஸ்.எம்.நிஷா, 48கிலோ எடை பிரிவில் சென்னை ஜெய்கோபால் கரோடியா மெட்ரிக் பள்ளி மாணவி வி.ஹேமாஸ்ரீ, 52கிலோ எடை பிரிவில் கோவை சவுடேஸ்வரி வித்யாலயா மாணவி ஏ.எஸ்.அவந்திகா, 58 கிலோ எடை பிரிவில் சென்னை எம்.ஏ.ஆர்.தோமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.கீர்த்தனா, 60 கிலோ எடை பிரிவில் கிருஷ்ணகிரி விஜய் வித்யாலயா பள்ளி மாணவி கே.காவ்யா, 60 கிலோவிற்கு மேற்பட்ட பிரிவில் சேலம் வித்யாபாரதி மேல்நிலைப்பள்ளி மாணவி அனுசியா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்கள் 10 பேரும், ஏற்கனவே 14 வயது பிரிவில் தேர்வு பெற்ற 11 பேரும் தெலுங்கானா மாநிலம் ரூப் நகரில் அக்.,4 முதல் 8 வரை நடக்கும் தேசிய டேக்வாண்டோ போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு, ராமநாதபுரத்தில் செப்.,25 முதல் சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.www.tnpgtakarurdt.in