புதிய ஓய்வூதிய திட்டத்தினருக்கு பணிக்கொடை(கிராஜூவிட்டி)
மத்திய அரசு CPS பெறுவோர் ஓய்வு பெறும்போது பணிக்கொடை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பணிக்கொடை என்பது ஓர் ஊழியரின் பணிக்காலத்தில் ஒவ்வொர் ஆண்டுக்கும் அரை மாத சம்பளம் வீதம் கனக்கிடப்படும்.அதாவது ஒரு ஊழியர் 20 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் தோராயமாக அவரின் 10 மாத சம்பளம் பணிக்கொடையாக கிடைக்கும்.தற்போது பணிக்கொடைக்கான உச்சவரம்பு 10இலட்சமாக உள்ளது