கேரளாவில் மருத்துவ படிப்பிற்கு
ஆண்டுதோறும் கேரள அரசு நுழைவுத்தேர்வு
நடத்தி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான
நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 27, 28
தேதிகளில் கேரளாவின் பல்வேறு மையங்களில்
நடைபெற்றது. மொத்தம் 1 லட்சத்து 16
ஆயிரத்து 900 பேர் இந்த தேர்வை எழுதினர்.
இந்த நுழைவு தேர்வின் முடிவுகள் நேற்று
வெளியிடப்பட்டன.
இதில் முதல் 7 இடங்களை மாணவர்கள் பிடித்து
சாதனை படைத்தனர். சென்னையை சேர்ந்த
மாணவர் 2-வது இடம் பிடித்தார்.
நுழைவுத்தேர்வில் முதல் 10 இடங்களை
பிடித்தவர்கள் விவரம் வருமாறு;-
1. வி.பி.முகம்மது (கண்ணூர்), 2. பி.லக்ஷ்மண்
தேவ் (சென்னை), 3. பென்சன் (எர்ணாகுளம்), 4.
ரமீசா ஜகான் (மலப்புரம்), 5. கெவின் ஜாய்
(திருச்சூர்), 6. எஸ்.அஜய் (எர்ணாகுளம்), 7.
ஆசிப் (மலப்புரம்), 8. லீனா அகஸ்டின்
(கோட்டயம்), 9. அரிகிருஷ்ணன் (கோழிக்கோடு),
10. நிகலா (மலப்புரம்).