Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 02, 2016

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 3, 4ல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு, ஜூன்
3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அரசு
தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிளஸ் 2
பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகல் கேட்டு
விண்ணப்பித்தவர்கள், 01.06.2016 காலை, 10:00 மணி
முதல், scan.tndge.in என்ற
இணையதளத்தில், தங்கள் பதிவெண் மற்றும்
பிறந்த தேதியை பதிவு செய்து, விடைத்தாள்
நகலை பெறலாம். விடைத்தாள் நகலை பெற்ற
பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு
விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட
இணையதள முகவரியில், விண்ணப்பத்தை
பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரண்டு
நகல்கள் எடுத்து, ஜூன், 3, 4ம் தேதிகளில்,
மாலை 5:00 மணிக்குள், முதன்மை கல்வி
அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான
கட்டணத்தை, முதன்மை கல்வி
அலுவலகத்திலேயே ரொக்கமாக செலுத்த
வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது