காலியிடங்கள்: 2,200
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 4,
1986 மற்றும் ஏப்ரல் 1, 1995 ஆகிய இடைப்பட்ட
காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.வயது
வரம்பில் சலுகை உண்டு.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை
அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு
துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க
வேண்டும். கல்வி இறுதியாண்டு படிக்கும்
மாணவர்களும் இத்தேவுக்கு
விண்ணப்பிக்கலாம். இவர்கள் ஆகஸ்ட் 31
தேதிக்குள் அல்லது நேர்காணலுக்கு
அழைக்கப்படும் போது, பட்டப்படிப்பில் தேர்ச்சி
பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க
வேண்டும்.
மூன்று நிலை தேர்வுகள்
மூன்று நிலைகளை கொண்ட இத்தேர்வில்,
முதல் நிலைத் தேர்வானது ஆன்லைனில்
’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் 100
மதிப்பெண்களுக்கு, ஆங்கிலம், பகுத்தறியும்
திறன் மற்றும் எண்ணியல் திறன் போன்றவை
சோதனை செய்யப்படும். இத்தேர்வில் தேர்ச்சி
பெறுபவர்கள், ’மெயின்’ தேர்வுக்கு தகுதி
பெறுவர்.
மெயின் தேர்வு: ’அப்ஜெக்டிவ்’ மற்றும்
’டிஸ்கிரிப்டிவ்’ அடிப்படையில் 250
மதிப்பெண்களுக்கு, ரீசனிங் அன்ட்
கம்ப்பியூட்டர் ஆப்டிடியூட், டேட்டா
அனாலிசஸ் அன்ட் இன்டர்பிரிடேஷன், பொது
அறிவு (வங்கித்துறை சார்ந்து) மற்றும்
ஆங்கில மொழியறிவு உள்ளிட்ட பகுதிகளில்
திறன்களை சோதிப்பதாக இருக்கும்!
மூன்றாம் நிலைத் தேர்வு, 50
மதிப்பெண்களுக்கு, குழு விவாதம் மற்றும்
நேர்முகத் தேர்வு நடைபெறும். இந்த மூன்று
நிலைத் தேர்வில் விண்ணப்பதார்கள் பெற்ற
மதிப்பெண்கள் அடிப்படையில் ’மெரிட்’
முறையில் பணிகள் வழங்கப்படும்.
முன்தேர்வு பயிற்சி
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர்களுக்கு,
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் சென்னை,
கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில்
பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in/careers
எனும் இணையதளம் மூலம் மட்டுமே
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 24