புதுடில்லி: மருத்துவ நுழைவுத் தேர்வுகளை
மாநில அரசுகள் நடத்த முடியாது. பொது
நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர்
சேர்க்கை நடத்த வேண்டும் என்று சுப்ரீம்
கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்த்து மாநில
அரசுகள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்
இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பொது
நுழைவுத் தேர்வு முறை
சிறுபான்மையினரையும் இடஓதுக்கீட்டையும்
எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும்
தீர்ப்பளித்துள்ளது.