Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, March 23, 2016

தமிழகத்தில் மே மாதம் 42 டிகிரி வெயில் கொளுத்த வாய்ப்பு

கோடை வெப்பம் தமிழகத்தில் அதன் உக்கிரத்தை காட்டத்
தொடங்கியுள்ள நிலையில், மே மாதத்தில் தமிழகத்தில்
வெப்ப நிலை 42 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு
மேலும் செல்ல வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
சென்னை வானிலை மையத்தின் தலைமை இயக்குநர்
எஸ்.பி.தம்பி, இது குறித்து கூறும்போது, “சாதாரண
வெப்பநிலையிலிருந்து 1 அல்லது 2 டிகிரி செல்சியஸ்
மாற்றமிருந்தால் அது இயல்பானது என்று கூறலாம்
ஆனால் 4 டிகிரி வரை உயர்ந்திருக்கிறது.
வறண்ட வானிலை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும்.
ஏப்ரல் மத்தியில் சென்னைக்கு கடும் வெப்பத்திலிருந்து
சற்றே விடுதலை கிடைக்க வாய்ப்புள்ளது. மாலையில்
அப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் மே
மாதத்தில் பகல் வெப்ப நிலை 42 டிகிரி மற்றும் அதற்கு
மேலும் செல்ல வாய்ப்புள்ளது” என்றார்.
வேலூர், சேலம், திருச்சி மாவட்டங்களில் 40 டிகிரி
செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. அதே போல்
கோவை, திருத்தணி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும்
சாதாரண வெப்ப அளவை விட 5 டிகிரி அதிகரித்துள்ளது.
மேல்காற்று காரணமாக வறண்ட காற்று வீசுவதால் வெப்ப
நிலை அதிகரிக்கிறது. ஆனால் இந்த மாதத்தில் இது
வழக்கத்திற்கு மாறாக உள்ளது என்று வானிலை ஆய்வு
மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
வானிலை வலைப்பதிவாளர் பிரதீப் ஜான், சேலம், வேலூர்
ஆகிய நகரங்களில் மார்ச் மாத வெப்ப நிலை கடுமையாக
உயர்ந்து வந்தாலும், முன்பாகவே வெப்ப
தரைக்காற்றினால் வெப்ப நிலை இதற்கு முன்னரே 40
டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது என்கிறார்.
ஆனாலும் இந்த மாத இறுதிவாக்கில் தென் தமிழகத்தில்
மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றே நிபுணர்கள்
கருதுகின்றனர்.
திங்களன்று சென்னை மற்றும்
புறநகர்ப்பகுதிகளில் மே மாதத்தின் மத்தியில் அடிப்பது
போன்ற வெயிலை உணர முடிந்தது.