Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, January 17, 2016

வெற்றி பெற சிறந்த வழிகள்


காலந்தவறாதீர்கள்.

குறைந்த வேலையாயினும்
நேரத்தோடு பூர்த்தி செய்யுங்கள்.

 வேலையைச் சுறுசுறுப்புடன் ஆரம்பித்து விடுங்கள். 

பதட்டமில்லாமல் வேலையில் கவனம் செலுத்துங்கள்.

 முகத்தில் கவலைக்குறி இல்லாமல் மகிழ்ச்சியான
உற்சாகமான தோற்றத்தோடு இருங்கள்.

 சக்தியை மற்றவர்களோடு பேசி விரயமாக்காதீர்கள்.

தேவையின்றிப் பேசுவதைத் தவிர்க்க முயலுங்கள்.

 வேலையைச் சுத்தமாகச் செய்யுங்கள். முழுமையாகச்
செய்யுங்கள். திருப்தியாகச்  செய்யுங்கள்.

 தவறு செய்வது மனித சுபாவம் என்று பேசிக்
கொண்டிருக்காதீர்கள். மன்னிக்கும் தெய்வ சுபாவம்
கொண்டவர்கள் இல்லாமல் போகலாம்.

 வருகின்றவர்களிடம் இனிமையாகப் பழகுங்கள்.
அவர்களின் தேவைகளைத் தெரிந்து கொள்ள முயற்சி
செய்யுங்கள்.

 சம்பந்தப்பட்ட எதையும் தீர்க்கமாகப் படிக்காமல்
முடிவுக்கு வராதீர்கள்.

 நீங்கள் வேலை செய்வதை எப்போதும் யாரோ
கவனித்துக் கொண்டிருப்பதாக எண்ணியே வேலை
செய்யுங்கள்.

நீங்கள் செய்கின்ற வேலையில் சிறப்பான கவனம் செலுத்த
அது உதவியாக இருக்கும்.

“வெற்றி பெற சிறந்த வழிகள்’ தொகுப்பிலிருந்து.