Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, January 19, 2016

'வாட்ஸ்-ஆப்' பயன்படுத்த கட்டணம் இனி இல்லை

'தகவல்களை பரிமாற உதவும், 'வாட்ஸ்ஆப்'பை, கட்டணமின்றி, இலவசமாக பயன்படுத்தலாம்'
என, அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி, 'ஆப்'
ஆகக் கருதப்படும், வாட்ஸ் ஆப், உலகம் முழுவதும், 100
கோடி பேரால் பயன்படுத்தப்படுகிறது. சில நாடுகளில்,
இதை பயன்படுத்த, ஆண்டு கட்டணமாக, 67 ரூபாய்
பெறப்பட்டது. அதேசமயம், இந்தியாவில் இதுவரை,
கட்டணமின்றி வாட்ஸ் ஆப் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
இந்நிலையில், 'உலகம் முழுவதும், கட்டணமின்றி,
வாட்ஸ் ஆப் பயன்படுத்தலாம். மேலும், இதில்,
விளம்பரங்கள் எதுவும் இடம் பெறாது' எனவும்,
அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ
இணையதளத்தில் வெளியான அறிவிப்பு விவரம்:உலகம்
முழுவதும், வாட்ஸ் ஆப், 100 கோடி பேரால்
பயன்படுத்தப்படுகிறது. நண்பர்கள், குடும்ப
உறுப்பினர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ள, முக்கிய
சாதனமாக, இது திகழ்கிறது.
இதை பயன்படுத்த, இனி எவ்வித கட்டணமும் செலுத்த
தேவையில்லை. முதல் ஆண்டுக்கு பின், குறைந்த
அளவு கட்டணம் செலுத்த வேண்டுமென, ஏற்கனவே,
வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வாட்ஸ் ஆப் நிறுவனம், பெரியளவில் வளர்ந்து
விட்டதால், கட்டணம் வசூலிக்க வேண்டாம் எனத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.