மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை விரைவில்
மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப் படும் என்று தகவல் வெளியாகி
உள்ளது.
மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றியமைப்பது தொடர்பான பரிந்துரையும்
இந்தக் குழுவின் அறிக்கையில் இடம் பெறும். இந்தப் பரிந்துரைகள் வரும் 2016
ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியத்தை
மாற்றியமைப்பதற் கான பரிந்துரையை வழங்க 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்
குழுவை மத்திய அரசு அமைக்கிறது.
இதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில்
7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்துக்குள் பரிந்துரையை
வழங்குமாறு அக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. இக்குழுவின் காலக்கெடு
டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்கு முன்பு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2006 ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது