பல்லாவரம்: அனகாபுத்துாரில், மது அருந்திவிட்டு வகுப்பறைக்குள் வாந்தி எடுத்த, பிளஸ் 2 மாணவர்கள் மூன்று பேரை, போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
சென்னை, பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்துாரில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. நேற்று பிளஸ் 2 படிக்கும் மூன்று மாணவர்கள், மது அருந்தி வகுப்பறைக்கு வந்தனர். அதில், ஒரு மாணவன் வகுப்பறையிலேயே வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள் அறிவுரை கூறியும், அவர்கள் மதிக்கவில்லை என, தெரிகிறது. இதையடுத்து, சங்கர்நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் மாணவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின், அவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, கடும் எச்சரிக்கைக்கு பின் மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக, அவர்களை வகுப்பறைக்கு அழைத்து சென்ற போலீசார், வாந்தி எடுத்த இடத்தை சுத்தம் செய்ய வைத்தனர்.