Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, June 15, 2015

மறு கூட்டல், மறு மதிப்பீடு மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறு கூட்டல், தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 15) வெளியிடப்பட உள்ளது.
 scan.tndge.in என்ற இணையதளத்தில் மாலை 4 மணி முதல் மாணவர்கள் இந்தப் பட்டியலைக் காண முடியும்.
 2015 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் எழுதினர். 
 இவர்களில் மதிப்பெண் மறு கூட்டல், விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 566 பேர் விண்ணப்பித்தனர்.
 அவர்களில் மதிப்பெண் மறு கூட்டலுக்கு 2,835 பேர், தேர்வுத்தாள் மறு மதிப்பீடுக்கு 3,502 பேர் என மொத்தம் 6,337 பேர் விண்ணப்பித்தனர்.
 இதில் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 2,782 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் 696 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
 ஜூன் 16-இல் மதிப்பெண் மாற்றம் தெரியும்: மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் வரும் திங்கள்கிழமை (ஜூன் 15) மாலை 4 மணிக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். 
 மதிப்பெண் மாற்றம் இல்லாத பதிவெண்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்காது.
 மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காலை 10 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வுப் பதிவெண், பிறந்த தேதி விவரங்களைப் பதிவு செய்து, திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.