Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, June 15, 2015

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 15) வெளியிடப்படுகிறது.
 சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் திங்கள்கிழமை (ஜூன் 15) மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
 தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in ஆகியவற்றில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.