Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 11, 2015

இன்ஜி., பட்டதாரிகளுக்குநீர்வடிப்பகுதி வளர்ச்சிப்பணி

ரூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, மாவட்ட கலெக்டரைத் தலைவராகக் கொண்டு, நீர்வடிப்பகுதி வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இம்முகாம் மூலமாக, ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டம் கடவூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் பஞ்., யூனியன்களில் தேர்வு செய்யப்பட்ட, 10 நீர்வடிப்பகுதிகளில், 2014-15ம் ஆண்டு முதல் திட்டம் செயல்படுத்த அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், பண்ணைக்குட்டைகள், நீர்அமிழ்வுக் குட்டைகள், தடுப்பணைகள், கசிவு நீர்க்குட்டைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. நீர்வடிப்பகுதிகளில் இப்பணிகளை செயல்படுத்த புதியதாக நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர் (பொறியாளர்) பணியிடம் மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட உள்ள குழுவின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பி.இ., (சிவில் இன்ஜினியரிங்) பட்டம் பெற்றிருக்கம் தகுதியுள்ள நபர்கள் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட வேளாண் இணை இயக்குனர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, கரூர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு வரும், 25ம் தேதி, 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், என்று கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.