Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, June 03, 2015

சத்துணவு உதவியாளர் நியமனம் இடைத்தரகரை நம்ப வேண்டாம்


"திருவண்ணாமலை மாவட்டத்தில், 419 சத்துணவு சமையல் உதவியாளர், நேரடி நியமனம் செய்ய உள்ளதால், இடைத்தரகரை நம்ப வேண்டாம்' என, கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
சத்துணவு திட்டத்தில் செயல்படும் சத்துணவு மையங்களில், 419 சமையல் உதவியாளர் பணியிடம், தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. கல்வித்தகுதியாக, பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு, 5ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும். பழங்குடி இனத்தவருக்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு, 21 வயது பூர்த்தியடைந்தும், 40வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பழங்குடியினருக்கு, 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர், 20 வயது நிரம்பியவராகவும், 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கும், குடியிருப்பிற்கும் இடையே உள்ள தூரம், மூன்று கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். மேற்படி சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வரும், 15ம் தேதி வரை சம்பந்தப்பட்ட, பி.டி.ஓ., அல்லது, நகராட்சி கமிஷனர், சத்துணவு திட்ட நேர்முக உதவியாளர் ஆகியோருக்கு, விண்ணப்பங்களை அனுப்பலாம். எனவே, எவரும் இடைத்தரகர் அல்லது வேறு எந்த நபர்களிடமோ பணம் கொடுத்து, குறுக்கு வழியில் பணி நியமனம் பெற முயற்சிக்க வேண்டாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.