Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, June 03, 2015

பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு


அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து, மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, ராமசாணிகுப்பத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளியில், 66 மாணவர்கள் படித்து வந்தனர். நடப்பாண்டில், புதிய மாணவர்களை சேர்க்கும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, ஆசிரியைகள் சுமதி, சரஸ்வதி, சசிரேகா, பிரபாவதி, மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வாசுதேவன், சமூக ஆர்வலர் பிரபாகன் ஆகியோர் வீடு, வீடாக சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. இதையடுத்து, புதிய மாணவர்கள் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெயராமன், பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, மேற்கு ஆரணி ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு, புதியதாக சேர்ந்த, 12 மாணவர்களுக்கு மாலை அணிவித்து, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு, அரசு சார்பில், விலையில்லா சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு மாவட்டத்திலேயே, கல்வி மற்றும் மாணவர் சேர்க்கையில் முன்மாதிரியாக இப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு கலெக்டர் பாராட்டுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது.