Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, June 03, 2015

எம்.பில்., பிஎச்.டி., நுழைவுத் தேர்வு


பாரதியார் பல்கலையிலுள்ள துறைகள் மற்றும் பல்கலையின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இயங்கும் கல்லுாரிகளில், பகுதி மற்றும் முழு நேர எம்.பில்., பிஎச்.டி., படிக்க, பல்கலையின் பொது நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். பொது நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களை, www.bu.ac.in என்ற பல்கலையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும், ௫ம் தேதிக்குள் பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும். பல்கலை மானியக்குழுவின் சி.எஸ்.ஐ.ஆர்., நெட், செட், கேட் ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் எம்.பில்., படிப்பில் சேர நுழைவுத் தேர்வு எழுதத் தேவையில்லை. அதேபோல், தகுதித் தேர்வு மற்றும் எம்.பில்., முடித்து பிஎச்.டி., படிக்க விரும்புபவர்களுக்கும் இத்தேர்வு அவசியமில்லை. நுழைவுத் தேர்வானது வரும் ஜூலை, ௧௨ம் தேதி காலை, ௧௧:௦௦ மணி முதல் மதியம், ௧௨:௩௦ வரை நடக்கிறது.