Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, June 03, 2015

அரசுப்பள்ளிகள் 100 சதவீத வெற்றி எப்படி?


மாணவர்களின் ஆர்வமும், ஆசிரியர்களின் முழுமையான ஈடுபாடுமே, நுாறு சதவீத தேர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததென, அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், உடுமலையில், வ,வேலுார், அரசு உயர்நிலைப்பள்ளி, அமராவதிநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி, பாப்பான்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஐந்து பள்ளிகள் சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அப்பள்ளி தலைமையாசிரியர்கள் கருத்துக்கள்: கொங்கல்

நகரம் பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளாமணி: கடந்தாண்டும், இப்பள்ளி பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது. இதனை ஒவ்வொரு ஆண்டும் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை இந்த ஆண்டிலும் உண்மையாகியுள்ளது. ஆசிரியர்களின் முழுமையான ஈடுபாடு மற்றும் மாணவர்களின் கடின உழைப்புமே இந்த வெற்றிக்கு அடிப்படை காரணம். 39 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ஜீவிதா, 481 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். அறிவியலில் 9, சமூக அறிவியலில் 2 மாணவர்கள் சதம் எடுத்துள்ளனர். 450க்கு மேல் 7 மாணவர்கள், 400க்கு மேல் 23 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். மலையாண்டிபட்டினம் பள்ளி தலைமையாசிரியர் ஜெயபாலன்:
எங்கள் பள்ளியும் கடந்தாண்டும் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. நடப்பாண்டில் 46 மாணவர்கள் தேர்வு எழுதியதில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இனி வரும் கல்வியாண்டுகளிலும், இந்நிலை தொடர, கடின முயற்சி எடுக்கப்படும். மாணவர்களின் பெற்றோரும், இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். சூழ்நிலை கருதாது, மாணவர்கள் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று படித்தனர். 400க்கு மேல் 22 மாணவர்கள், 450க்கு மேல் 10 மாணவர்கள், மதிப்பெண் எடுத்துள்ளனர். அறிவியலில் 11, சமூக அறிவியலில் 4, கணிதத்தில் 2 மாணவர்கள் சதம் எடுத்துள்ளனர். மாணவர் கார்த்திகேயன், 490 மதிப்பெண் பெற்று தாலுகா அரசு பள்ளி அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

அமராவதிநகர் பள்ளி தலைமையாசிரியர் சகுந்தலா: இப்பள்ளியில், பெரும்பான்மையான மாணவர்கள் மலைவாழ் கிராம மாணவர்கள்தான். இம்மாணவர்களின் மீது ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பித்தனர். இம்மாணவர்களின் பெற்றோரிடத்து போதிய கல்வி விழிப்புணர்வு இல்லாததால், பள்ளியிலேயே பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளியிலுள்ள அனைவரின் முயற்சியால் மட்டுமே, இவ்வாறான வெற்றியை அடைய முடியும். மாணவர் அருண்குமார், 475 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். 9 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்னர். நுாறு சதவீத தேர்ச்சி மட்டுமின்றி, மாநில அளவில் சாதனை புரிவதற்கும், வரும் கல்வியாண்டில் முயிற்சி எடுப்போம். பஸ் வசதியில்லாமலும், இலக்கை நோக்கி பயணித்து வெற்றி பெற்ற பள்ளிகள்: வ.வேலுார் அரசு பள்ளி தலைமை

ஆசிரியர் சித்ரா: இப்பள்ளியில் 162 மாணவர்கள் தற்போது படிக்கின்றனர். இதில், 35 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். மாணவி தனலட்சுமி 465 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். 12 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் ஏராளமான மாணவர்களின் கனவுகளுக்கு அடிப்படை தளமாக அரசு பள்ளிகள் விளங்குகிறது என்பதை அனைத்து ஆசிரியர்களும் நினைவில் வைத்து பாடம் கற்பிக்க வேண்டும்.

பாப்பான்குளம் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார்: இப்பள்ளியில் 125 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்தாண்டு 95 சதவீதம் தேர்ச்சி பெற்றது. நுாறு சதவீத தேர்ச்சி ஒன்றையே இலக்காக நிர்ணையித்து செயல்பட்டதில் நடப்பாண்டு தேர்வில் தேர்வு எழுதிய 25 மாணவர்களும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர் விஷ்ணு, 474 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 300 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்துள்ளனர். 7 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். ஒவ்வொரு அரசு பள்ளியும் பிற பள்ளிகளுக்கு ஓரு எடுத்துக்காட்டாக அமையும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினர்.