அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி உள்ளிட்ட மூன்று துறைகளின் பணி நியமனத்துக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
* அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கு, 23 காலியிடங்களை நிரப்ப, 2013ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில், 20,433 பேர் பங்கேற்றனர்.
இதன் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.
* புள்ளியியல் துறை ஆய்வாளர் பணிக்கு காலியாக உள்ள, ஆறு பணியிடங்களை நிரப்ப, 2014 அக்டோபர், 11ல் தேர்வு நடந்தது. இதன் முடிவுகளும் நேற்று வெளியானது. இதில், 18 பேர் தேர்வாகினர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.
* அரசு அச்சக உதவி மேலாளர் (பணிகள்) பதவிக்கு, எட்டு காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு நவம்பர், 11ல் தேர்வு நடந்தது. 432 பேர் தேர்வு எழுதினர்.இந்த தேர்வின் முடிவும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், 22 பேர் தேர்வாகினர். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.''ஒரே நாளில், மூன்று துறைகளின் தேர்வு முடிவுகளை வெளியிடுவது இதுவே முதல் முறை,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்பிரமணியம் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.தேர்வு முடிவு விவரங்களை, http:/www.tnpsc.gov.in/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.