பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முடிவுகள் வரும், 15ம் தேதி வெளியிடப்படுகின்றன.பிளஸ் 2 தேர்வில், மறு கூட்டலுக்கு, 2,835 பேர் விண்ணப்பித்ததில், 696 பேருக்கும், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்த, 3,502 பேரில், 2,782 பேருக்கும் மதிப்பெண் மாற்றம் உள்ளது.இந்த முடிவுகள் வரும், 15ம் தேதி http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.மதிப்பெண் வராதவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு வரும், 16ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.