Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 25, 2015

21ம் நூற்றாண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் தெண்டுல்கர் தேர்வு

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் ஆஸ்திரேலிய இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில், 21ம் நூற்றாண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2000வது ஆண்டில் இருந்த சிறப்பாக விளையாடிய சுமார் 100 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில், இந்தியாவின் சச்சின் தெண்டுல்கருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
சச்சினைத் தொடர்ந்து இலங்கையின் குமார சங்ககாரா இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 3வது இடத்தையும்  பிடித்துள்ளனர்.