Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, May 09, 2015

ஆய்வக உதவியாளர் பணி- இலவச பயிற்சி

தமிழ்நாடு கல்வி துறையின் மூலமாக வருகிற 31–ந்தேதி ஆய்வக உதவியாளர்
பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த போட்டித்தேர்வுக்குரிய இலவச பயிற்சி
வருகிற 11–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை தினமும் பிற்பகல் 2 மணி முதல்
மாலை 5 மணி வரை திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு
விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறாது.குரூப்–1 மற்றும்
குரூப்–2 மூலம் தேர்வு செய்யப்பட்டு பிற துறைகளில் பணிபுரிந்து வரும்
அலுவலர் மற்றும் சிறந்த பயிற்றுனர்கள் மூலமாக இலவச பயிற்சி
அளிக்கப்படுகிறது. ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்ததற்கான ஆதார
நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரிலோ அல்லது தபால்
மூலமாகவோ திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட
கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.