Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, May 22, 2015

குளித்தலை அரசு பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி

 குளித்தலை அரசு பள்ளி மாணவி, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், 491 மதிப்பெண் பெற்று, முதலிடம் பெற்றார்.
குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிரியதர்ஷினி, 491 மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், சுபாஷனி மற்றும் வைஷ்னவி, 487 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடத்தையும், எஸ்டாமெர்சி, 482 மதிப்பெண் எடுத்து, மூன்றாம் இடத்தையும் பிடித்தார். தேர்வு எழுதிய, 311 பேரில், 291 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94 சதவீதம். வெற்றி பெற்றவர்களை, பள்ளி தலைமை ஆசிரியை நாகேஸ்வரி பாரட்டினார். 

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கார்த்திக், 472 மதிப்பெண் பெற்று, முதல் இடத்தையும், பிரவின், சதீஸ்குமார், சுரேந்தர், 468 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடத்தையும், கோபிநாத், 467 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
தேர்வு எழுதிய, 204 மாணவர்களில், 194 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 95 சதவீதம் தேர்ச்சி. வெற்றி பெற்றவர்களை, பள்ளி தலைமைஆசிரியர் மனோகரன் பாராட்டினார்.
* தோகைமலை யூனியன் கூடலூர் பஞ்சாயத்து அரசு மேல் நிலைப்பள்ளியில் பாலக்குமார், 484 மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், பங்கஜம், 457 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடத்தையும், கீர்த்தனா, 456 மதிப்பெண் எடுத்து, மூன்றாம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை பள்ளித்தலைமையாசிரியர் மாதேஸ்வரன் மற்றும் பலர் பாராட்டினர்.