புதுடில்லி:மருத்துவ படிப்புக்கான பாடத் திட்டத்தை, 21 ஆண்டுகளுக்குப் பின் மாற்றி அமைத்து, எம்.சி.ஐ., எனப்படும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நோயாளி களின் உடலில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கம் மட்டுமின்றி, அவர்களின் மன நிலையையும் அறிந்து, டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாக, எம்.சி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, அதன் செயல்பாட்டை கவனித்து, வழி நடத்துவது உள்ளிட்ட பணி களை, எம்.சி.ஐ., எனப்படும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொள்கிறது. மருத் துவ மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை வரையறுப்பதும், எம்.சி.ஐ.,யின் பிரதான பணிகளில் ஒன்றாக உள்ளது. இந் நிலையில், மருத்துவ இளநிலை பட்டப்படிப் பான, எம்.பி. பி.எஸ்.,பாடதிட்டம், கடைசியாக, 1997ல் மாற்றி அமைக்கப்பட்டது.