Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, November 18, 2018

மாணவியருக்கு இலவச ஸ்கூட்டி


ம. பிக்கான, தேர்தல் அறிக்கையை, பா.ஜ., நேற்று வெளியிட்டது.நிதி யமைச்சரும், பா.ஜ.மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, 

தேர்தல், அறிக்கையை வெளியிட்டு, கூறியதாவது: கடந்த, 2003ல், ஆட்சியில் இருந்து, காங்கிரஸ் வெளியேற்றப்பட்டது. 

அப்போது, முக்கிய நகரங்களில் கூட, போதிய குடிநீர் வசதி, சாலை வசதி என, அடிப்படை வசதிகள் இல்லை. ஆனால், கடந்த, 15 ஆண்டுகளில், மாநிலம் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தின் செயல்பாட்டை, பா.ஜ., மாற்றி அமைத்துள்ளது. மீண்டும், பா.ஜ., ஆட்சி அமைந்தால், ஏழை, எளிய மக்களுக்கு, வளர்ச்சியின் பலன் தொடர்ந்து கிடைக்கும். 

மாநிலத்தில், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வோம். பிளஸ் 2 தேர்வில், 75 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெறும் மாணவியருக்கு, இலவச ஸ்கூட்டி வழங்கப்படும்.